கொப்பரை தேங்காய் விலை உயராததால் தென்னை விவசாயிகள் கவலை

ரூ.180-க்கு மேல் கொப்பரை தேங்காய் விலை போகவில்லை.
கொப்பரை தேங்காய் விலை உயராததால் தென்னை விவசாயிகள் கவலை
Published on: 

ஈரோடு,

வரத்து குறைந்த நிலையிலும், தேங்காய், கொப்பரை விலை உயராததால்,தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:-

கோடை மழை, பருவமழையில் நன்கு வளர்ந்து, பூப்பிடித்து ஜனவரி- மே மாதங்களில் தேங்காய் சீசன் நன்றாக இருக்கும். கடந்தாண்டு மழை குறைவு; இந்தாண்டு சுத்தமாக மழை இல்லாததால், தேங்காய் வரத்து சரிந்துள்ளது.

நேற்று மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒரு கிலோ தேங்காய், ரூ50.19 -ரூ53.63-க்கும், கடந்த, 3-ம் தேதி பெருந்துறை விற்பனை கூடத்தில் ஒரு கிலோ கொப்பரை தேங்காய், ரூ.143.01 முதல் ரூ.155.19-க்கும் விற்பனையாகியுள்ளது. இந்தாண்டு அதிகபட்சமாக, ரூ.180-க்கு மேல் கொப்பரை தேங்காய் விலை போகவில்லை.

வரும் ஜனவரி மாத சீசனுக்கு கடந்த மாதமே குரும்பை பிடித்து, 5 மாதத்தில் காய் முதிர்ந்து பலன் தர வேண்டும். கடும் வெயிலால் பெரும்பாலான தென்னையில் குரும்பை பிடிக்காமலும், பிடித்த குரும்பையில் பூ உதிர்ந்தும் கவலை அடைய செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com