பரமத்திவேலூரில் ரூ.12¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.12¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
பரமத்திவேலூரில் ரூ.12¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
Published on

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகையையொட்டி விடுமுறை என்பதால் ஏலம் நடைபெறவில்லை. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 18 ஆயிரத்து 958 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.74.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.56.69-க்கும், சராசரியாக ரூ.72.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்து 941-க்கு ஏலம் போனது.

X

Daily Thanthi
www.dailythanthi.com