ரூ.9.36 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.9.36 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.9.36 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
Published on

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.78.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.48-க்கும், சராசரியாக ரூ.77.49-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 17 ஆயிரத்து 153-க்கு ஏலம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 13 ஆயிரத்து 376 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.76.82-க்கும் குறைந்தபட்சமாக ரூ.64-க்கும், சராசரியாக ரூ.70.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 36 ஆயிரத்து 320-க்கு ஏலம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com