ரூ.15 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ.15 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
Published on

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தை கடந்த வாரம் குடியரசு தின விழாவை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டு இருந்தது. நேற்று நடந்த ஏலத்திற்கு 20 ஆயிரத்து 685 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.99-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.33-க்கும், சராசரியாக ரூ.81.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 12 ஆயிரத்து 685-க்கு ஏலம் போனது.

X

Daily Thanthi
www.dailythanthi.com