300 பேருக்கு தென்னங்கன்றுகள்

வேளாண்மை துறை சார்பில் 300 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
300 பேருக்கு தென்னங்கன்றுகள்
Published on

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஆனந்தன் தலைமை தாங்கினார். உதவி விதை அலுவலர் முருகேசன், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவிவேளாண்மை அலுவலர் நாசர் வரவேற்றார். இதில் தேர்வு செய்யப்பட்ட 300 பேருக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா டேவிட், துணைத்தலைவர் கணேசன், ஊராட்சி செயலாளர் குமுதா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com