பட்டுக்கோட்டையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.21.75-க்கு ஏலம்

பட்டுக்கோட்டையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.21.75-க்கு ஏலம் போனது.
பட்டுக்கோட்டையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.21.75-க்கு ஏலம்
Published on

பட்டுக்கோட்டையில் ஒரு கிலோ தேங்காய் ரூ.21.75-க்கு ஏலம் போனது.

தேங்காய் ஏலம்

பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. தஞ்சை விற்பனைக்குழுவின் செயலாளர் சரசு, விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வையாளர் வேதமுத்து, உதவி வேளாண் அதிகாரி மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஏலத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணியை சேர்ந்த விவசாயிகள் 29.1 குவிண்டால் உரித்த தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு தேங்காய்களை பார்வையிட்டு தரத்தின் அடிப்படையில் விலைப்புள்ளிகளை குறிப்பிட்டு ஏல பெட்டியில் போட்டனர்.

விலை நிர்ணயம்

இதில் தனியார் வணிகர்களின் அதிகபட்ச விலையாக குடுமிக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.21.75 என நிர்ணயிக்கப்பட்டது. குறைந்தபட்ச விலை ரூ.21 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை அடுத்து விவசாயிகளிடம் இருந்து 29.1 குவிண்டால் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com