கோவை: வனப்பகுதியில் தனியாக தவித்த குட்டி யானை கூட்டத்தோடு சேர்ந்தது


கோவை: வனப்பகுதியில் தனியாக தவித்த குட்டி யானை கூட்டத்தோடு சேர்ந்தது
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 22 Jun 2025 6:23 AM IST (Updated: 22 Jun 2025 6:24 AM IST)
t-max-icont-min-icon

குட்டி யானை, தன் கூட்டத்தோடு சேர்ந்ததால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெத்திக்குட்டை பகுதியில் கூட்டத்தைவிட்டு பிரிந்த குட்டியானை ஒன்று தனியாக தவித்துக்கொண்டிருந்தது. உடனே அந்த குட்டி யானையை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது குட்டியானை தானாகவே வனப்பகுதிக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தது. இந்த நிலையில் அந்த குட்டி யானை கூட்டத்தோடு சேர்ந்தது. இதனால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள், குட்டி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

1 More update

Next Story