கோவை கார் வெடிப்பு சம்பவம்: கண்காணிப்பு வளையத்தில் 30 பேர் - கோவை எஸ்.பி. தகவல்

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 30 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளதாக கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு சம்பவம்: கண்காணிப்பு வளையத்தில் 30 பேர் - கோவை எஸ்.பி. தகவல்
Published on

கோவை,

கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்பில் ஜமேஷா முபின் இறந்தார். அவரது வீட்டை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வெடிமருந்துகள், ஜிகாத் குறிப்புகள், ஐ.எஸ். வாசகங்கள் உள்பட 100-ற்கும் மேற்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டனர்.

இதனையடுத்து வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு டிஐஜி வந்தனா, எஸ்.பி.ஸ்ரீஜித் மற்றும் விசாரனை அதிகாரி விக்னேஷ் உள்ளிட்டோர் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 30 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளதாகவும், 3 முதல் 4 பேரை தீவிரமாக கண்காணித்துவருவதாகவும் கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன், "கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள், பென் டிரைவ்-ல் ஐஎஸ் அமைப்பு தொடர்பான வீடியோ காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து 30 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளோம். 3 முதல் 4 பேரை தீவிரமாக கண்காணித்துவருகிறோம்" எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com