கோவை கார் வெடிப்பு சம்பவம்: தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
கோவை கார் வெடிப்பு சம்பவம்: தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி அதிகாலை 4 மணியளவில் வந்த கார் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த ஒருவர் பலியானார். சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்னர். தற்போது, சம்பவம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை விரைந்துள்ளனர்.

இந்த நிலையல், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதில் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

அப்போது, கோவை சம்பவம் தொடர்பாக விசாரணை நிலவரம், கைது நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களை முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com