கோவை கார் வெடிப்பு - வெளியான பரபரப்பு தகவல்...!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான பரோஸ் இஸ்மாயில் கேரள சிலையில் உள்ளவர்களை சந்தித்துள்ளார்.
கோவை கார் வெடிப்பு - வெளியான பரபரப்பு தகவல்...!
Published on

கோவை,

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள், கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியது தெரியவந்தது. இதனால் இவ்வழக்கிற்காக 6 தனிப்படைகள் அமைக்கபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கார் வெடிப்பு வழக்கில் கைதான பெரோஸ் கேரள சிறையில் உள்ள ரசித் அலி, முகமது அசாருதீன் ஆகியோரை சந்தித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

2019-ம் ஆண்டு இலங்கை தேவாலம் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைதானவர் முகனது அசாருதீன். எனவே இவர்கள் 3 பேரின் சந்திப்பின் நோக்கம் குறித்து போலீசார் தீவிர விவாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com