கோவை கல்லூரி மாணவர் ராகிங் விவகாரம் - கைதான 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

7 பேரும் 30 நாட்களுக்கு காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை கல்லூரி மாணவர் ராகிங் விவகாரம் - கைதான 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
Published on

கோவை,

கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில், முதலாம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை பீளமேடு போலீசார் கல்லூரிக்குள் சென்று 7 மாணவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த 7 பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் 7 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் ஜாமீன் கோரி விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கு கோவை கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இவர்கள் 30 நாட்களுக்கு அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com