கோவை: மின்கம்பியை துதிக்கையால் பிடித்து இழுத்த யானை - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

கோவை அருகே உள்ள மதுக்கரை வனப்பகுதியில் மின் மாற்றியில் இருந்த மின்கம்பியை துதிக்கையால் பிடித்து இழுத்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்தது சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பது தெரியவந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்ட பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், யானை மின் மாற்றி அருகே சென்றபோது அங்கிருந்த கம்பியை துதிக்கையால் பிடித்து இழுத்ததாகவும், அதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் உடலை பரிசோதனை செய்தனர். மேலும், வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களுக்கான மின்சார கட்டமைப்புகளை யானைகள் அணுகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளிடம் வனத்துறை வலியுறுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com