

கோவை ,
கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்த 10 வயது சிறுமைய கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடல் கண்ணம்பாளையம் குளக்கரை அருகே தென்னந்தோப்பை ஒட்டி உள்ள புதரில் வீசப்பட்டது. இது குறித்து சூலூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கட்டிட தொழிலாளி கார்த்திக் (வயது 33) என்பவரையும், அதற்கு உடந்தையாக இருந்த கார்த்திக்கின் நண்பர் மோகன்(30) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் கைது செய்ய சென்ற போது தப்பிச்செல்வதற்காக வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்ததில் கார்த்திக் கின் கை, கால் முறிந்தது. இதனால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மோகனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகளுக்கான சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வார்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, வழக்கில் கைதான இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஓராண்டுக்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது. தமிழகத்தை உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் விஜய் உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.