

சென்னை,
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தனது எக்ஸ் வலை தளத்தில் கூறியிருப்பதாவது:-
கோவையில் 10_வயது_சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்திருப்பது பெரும் துயரத்தை தருகிறது.
சண்டாளர்களின் இது போன்ற செயல்களால், பெண் குழந்தைகளை வெளியே அனுப்புவதே ஆபத்து என்ற சூழல் உருவாவது நல்லதல்ல!
மாறிவரும் ஆபத்தான சூழல்களை கவனத்தில் கொண்டு, சமூகவியலில் நாம் எல்லோரும் அக்கறை எடுக்க வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்கு தாய்மார்கள் அதிகமான அளவில் எச்சரிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டியது அவசியமாகும்.
பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும், புரிதலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
பிள்ளைகளின் மீதான கண்காணிப்பை பெற்றோர்கள் அதிகமாக வெளிப்படுத்த வேண்டிய காலம் உருவாகிவிட்டது என்பதை புரிந்து கொள்வோம்.
இந்த படுபாதக செயலை செய்தவர்கள் மீது சட்டத்தின் துணைகொண்டு கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.