கோவை: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் ஓட்டுநர் கைது

சங்கர் அரசு போக்குவரத்து கழக பஸ்சில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
கோவையில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஸ் ஓட்டுநர் கைது.
கைது செய்யப்பட்ட சங்கர்
Published on

கோவை,

கோவை மாவட்டம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த வஞ்சியம்மன் திருமுருகன் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 36). இவர் அரசு போக்குவரத்து கழக பஸ்சில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பக்கத்து ஊரில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.

அப்போது, பக்கத்து வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை, வீட்டிற்குள் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

பஸ் ஓட்டுநர் கைது

இந்த சிறுமி, பெற்றோரிடம் நடந்ததைக் கூறினார். இதையடுத்து பெற்றோர் பேரூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com