கோவை: காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா -எல்.முருகன் டுவீட்

வைணவ மரபின் 108 அபிமான ஷேத்திரங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது.
கோவை: காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா -எல்.முருகன் டுவீட்
Published on

கோவை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் காரமடை அரங்கநாதர் திருக்கோவில் தேர்த்திருவிழா குறித்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்,அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியில் அமைந்துள்ள அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது.

இங்கு மூலவர் ரங்கநாதசுவாமியாகவும் , அவரது துணைவியார் லட்சுமியை இந்த கோவிலில் ரங்கநாயகியாகவும் பக்தர்கள் வணங்குகிறார்கள். இது வைணவ மரபின் 108 அபிமான ஷேத்திரங்களில் ஒன்றாகவும்,ஏறத்தாழ1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புகழ்மிக்க வைணவத் தலங்களுள் ஒன்று.இக்கோயில் முதலில் சோழ வம்சத்தினரால் கட்டப்பட்டது, பின்னர் நாயக்கர் மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் நடைபெறும் காரமடை தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்ச்சி ஆகும்.

இந்த நன்னாளில், அருள்மிகு அரங்கநாதர் பக்தகோடிகள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பக்தர்கள் அனைவருக்கும், அனைத்து வளங்களும், ஆரோக்கியமும் கிடைத்திட வேண்டி அருள்மிகு அரங்கநாதரிடம் வேண்டிக் கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com