கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது

கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.
கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது
Published on

சென்னை

சென்னை வானிலை மையம் கூறி உள்ளதாவது:-

கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவில் மிதமான மழை பெய்யும் வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வங்க கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த தரை காற்று வீசும் , தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com