கோவை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் எதிரொலி - சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சோதனை

கோவை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் எதிரொலி - சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சோதனை
Published on

சென்னை,

கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் கடந்த 3 நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏறக்குறைய 9 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

கோவை வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அங்குள்ள போலீஸ் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com