

கோவை,
சிறந்த வாழ்க்கை தர குறியீட்டு பட்டியலில் இந்திய அளவில் கோவைக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக கோவை விளங்கி வருகிறது. இங்கு மக்கள் தொகை 30 லட்சத்தை நெருங்கி வருகிறது. 1804-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கோவை நகரம், 19-ம் நூற்றாண்டில் ஜவுளி உற்பத்தியில் சிறந்து விளங்க தொடங்கியது.
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, தற்போது ஐ.டி. துறையிலும் சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. கோவை சீதோஷ்ணநிலை, வேலை, வாழ்க்கை தரம் என்று இந்தியாவில் மற்ற நகரங்களை விட சாதனை படைத்து வருகிறது. இதுதவிர கல்லூரிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் உயர் கல்வியிலும் சிறப்பான இடத்தை வகிக்கிறது.
கோவையில் சர்வதேச அளவிலான மருத்துவமனைகள் இருப் பதால், உலக தரத்துக்கு தகுந்தவாறு அறுவை சிகிச்சைகள் நடைபெற்று மருத்துவத்திலும் முக்கியமான இடத்தை கோவை பதித்துள்ளது. வாழ்க்கை செலவு மற்றும் வாழ்க்கை தரம் குறித்து மத்திய அரசு மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நம்பியோ அமைப்பு ஆய்வு செய்து புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் வாழ்க்கைத்தர குறியீட்டின்படி, இந்தியாவில் உள்ள 14 நகரங்களில் கோவை 5-வது இடம் பிடித்துள்ளது. இதன் வாழ்க்கைத்தர குறியீடு 131.5 ஆகும். 4-வது இடத்தில் உள்ள சென்னை 132.2 புள்ளிகளை பெற்றுள்ளது. ஐதராபாத் 167.1 புள்ளியுடன் முதல் இடம் பிடித்துள்ளது. கோவையின் வாழ்க்கை செலவு குறியீடு 17.2 மட்டுமே. சென்னை (20.1), பெங்களூரு (21.7), மும்பை (25.8) ஆகிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு ஆகும்.
குறைந்த வாழ்க்கை செலவு, சிறந்த கல்வி நிறுவனங்கள், மேம்பட்ட சுகாதார வசதிகள், வலுவான தொழில் மற்றும் தொழில்முனைவோர் சூழல், இதமான காலநிலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகாமையில் அமைந்திருப்பது ஆகியவை கோவையின் சிறப்பாகும். கோவையின் எதிர்காலத்திற்கான திட்டமிடல் தற்போதைய வாழ்க்கை தரத்தை தக்கவைக்கவும், அதனை மேலும் மேம்ப டுத்தவும், கோவைக்கு தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நகர்ப்புற மேம்பாட்டு உத்தி தேவைப்படுகிறது. இதற்கான வழிவகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
சுமார் 1,532 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 'கோவை முதன்மை திட்டம்-2041' (கோவை மாஸ்டர்பிளான்) கடந்த ஆண்டு ஜூலை மாதம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதே, நகரின் எதிர்கால வளர்ச்சிக்கான முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.
நகர்ப்புற விரிவாக்கம், நில பயன்பாடு, வீட்டுவசதி, தொழில் வளர்ச்சி, பசுமை இடங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய, நீண்டகால மற்றும் விரிவான திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். கோவை நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (சி.யு.டி.ஏ.), நகரம் மற்றும் அதன் விரிவடைந்து வரும் நகர்ப்புற பகுதிகளில் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் அவசியமாகி வருகிறது.
குறிப்பாக சாலைகள், பொது போக்குவரத்து. புறநகர் ரெயில் சேவை, மெட்ரோ திட்டங்கள், பாதசாரிகளுக்கான வசதிகள் மற்றும் சைக்கிள் பாதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய, நீண்டகால நோக்குடன் கூடிய 5 ஆண்டு வரைபடம் தயாரித்து விரிவான போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.
பல்வேறு போக்குவரத்து அமைப்புகளை ஒருங்கிணைக்கவும், போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், திறமையான பயண வசதியை உறுதி செய்யவும் உதவும் ஒரு ஒருங்கி ணைந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட்டநீர் மற்றும் கழிவு மேலாண்மையில் கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். நீர் பாதுகாப்பு, அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை தொடர்பான நவீன திட்டங்களை பொதுமக்களுக்கு உருவாக்க வேண்டும்.
திட்டமிடப்பட்ட நகர்ப்புற வளர்ச்சியின் மூலம், கோவை அதிக முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் முடியும். அதே வேளை யில், மலிவான வாழ்க்கை செலவு மற்றும் வாழ்வதற்கு ஏற்ற சூழலையும் தொடர்ந்து தக்கவைக்க முடியும்.
கோவை வெறும் பெரிய நகரமாக மட்டும் வளராமல், எதிர் கால சந்ததியினருக்காக நன்கு திட்டமிடப்பட்ட, சிறந்த போக் குவரத்து இணைப்புகளைக் கொண்ட, பசுமையான மற்றும் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரமாக வளர வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.