கோவை: மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கோவை: மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
Published on

கோவை,

பொதுமன்னிப்பின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை ஜாதி, மத வித்தியாசமின்றி தமிழக அரசு விடுதலை செய்யக்கோரி, மனிதநேய ஜனநாயக கட்சியினர் சிறை முற்றுகை போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமீமுன் அன்சாரி தலைமை தாங்கினார். இந்த முற்றுகை போராட்டத்தில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கோரிக்கை முழக்கமிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com