

கோவை,
கோவை ஆவாரம்பாளையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட 3 மாடி வணிக வளாகத்தை நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.
தாமோதரன் என்பவர் இந்த அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடைகள் கட்டி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதுகுறித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று வணிக வளாக கட்டிடம் இடித்து அகற்றபப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.