கோவை: மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்த டிப்பர் லாரி - டிரைவர் பலி

கோவையில் டிப்பர் லாரியில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்த விபத்தில் டிரைவர் உடல் கருகி உயிரிழந்தார்.
கோவை: மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்த டிப்பர் லாரி - டிரைவர் பலி
Published on

கோவை,

கோவை மாவட்டம் குமரபுரம் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்து சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான தார் கலவை மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் காரமடையில் தயார் செய்யப்பட்டு இங்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் கரூரை சேர்ந்த ஆறுமுகம் (வயது 32) என்பவர் சாலை பணிக்காக லாரியில் தார் கலவை ஏற்றி வரும் பணியை செய்து வந்தார். வழக்கம் போல் இன்று அதிகாலை 4 மணிக்கு ஆறுமுகம் லாரியில் தார் கலவை ஏற்றிக் கொண்டு சாலை பணி நடக்கும் குமாரபுரம் வந்தார்.

அப்போது, லாரியில் இருந்தார் தார் கலவையை சாலையில் கொட்டுவதற்காக ஹைட்ராலிக் மூலம் (தானியங்கி கருவி) இயக்கினார்.

இதில், எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதி மின்கம்பத்தில் உரசியது. உசிய வேகத்தில் தீப்பற்றிய லாரி சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ஆறுமுகம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் லாரி முற்றிலும் சேதம் அடைந்தது.

பின்னர், சம்பவ இடம் வந்த போலீசார் உயிரிழந்த டிரைவர் ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com