தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரம்

நெகமத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதால், தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரம்
Published on

நெகமம்

நெகமத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதால், தென்னை நார் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென்னை நார்

பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன.

குறிப்பாக தென்னை நார் உற்பத்தியில் 150-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன. பச்சை தேங்காய் மட்டையில் இருந்து வெள்ளை நிற நாரும், காய்ந்த கருப்பு மட்டையில் இருந்து கருப்பு நிற நாரும் தயாரிக்கப்படுகிறது.

இங்கு தென்னை நார் மூலம் தயாரிக்கப்படும் பெரும்பாலான கயிறு கேரளாவிற்கும், சீனாவிற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மட்டையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நாரை வெயிலில் காயவைப்பது அவசியம். தென்னை நார் வெயிலில் நன்றாக உலர்ந்தால் தான் அதனுடைய தரம் அதிகமாக இருக்கும்.

உலர வைக்கும் பணி

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் காரணமாக தென்னை நார் உலர வைக்கும் பணி மந்தமாக இருந்தது. இதனால் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது வெயில் அதிகளவில் வாட்டி வதைப்பதால் நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் தென்னை நார் உலர வைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், நெகமம் பகுதியில் அவ்வபோது பெய்த மழையின் காரணமாக தென்னை நாரை உலர வைக்க முடியாமல் தவித்து வந்தோம். தற்போது மழை குறைந்து கடுமையான வெயில் அடித்து வருவதால் தென்னை நாரை உலர வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கயிறு உற்பத்தியும் தொடங்கியுள்ளது என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com