சென்னையில் மறைந்த தலைமைக் காவலரின் மகனுக்கு சக காவலர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி

மறைந்த தலைமைக் காவலரின் மகனுக்கு சக காவலர்கள் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளனர்.
சென்னையில் மறைந்த தலைமைக் காவலரின் மகனுக்கு சக காவலர்கள் ரூ.15 லட்சம் நிதியுதவி
Published on

சென்னை,

சென்னை தெற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் ரமேஷ். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ரமேஷின் மனைவியும் இரண்டு வருடங்களுக்கு உயிரிழந்த நிலையில், இந்த தம்பதியின் ஒரே மகனான எட்டாம் வகுப்ப்பு படிக்கும் மாணவன் திவ்யேஷ், தந்தையின் சகோதரி வீட்டில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் தலைமைக் காவலர் ரமேஷின் குடும்பத்திற்கு உதவும் வகையில், அவருடன் 1999-வது பேட்ச்சில் தேர்ச்சி பெற்ற சக காவலர்கள், வாட்ஸ் ஆப் குழு மூலம் சுமார் 13.5 லட்சம் ரூபாய் நிதி வசூல் செய்துள்ளனர்.

இவர்களுடன் சென்னை பெருநகர காவல்துறையும் இணைந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வசூல் செய்த நிலையில், இரு காசோலைகளும் மறைந்த தலைமைக் காவலர் ரமேஷின் மகன் திவ்யேஷிடம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com