திருச்செந்தூர் பகுதியில் பனை விதைகள் சேகரிப்பு

திருச்செந்தூர் பகுதியில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் பனை விதைகள் சேகரித்தனர்.
திருச்செந்தூர் பகுதியில் பனை விதைகள் சேகரிப்பு
Published on

திருச்செந்தூர்:

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தை தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம், கிரீன்நீடு சுற்றுச்சூழல் அமைப்பு, எல்-பாஸ் விழிப்புணர்வு இயக்கம் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள், ஒரு லட்சம் என்.எஸ்.எஸ். மாணவ-மாணவிகள், அரசுத்துறைகளின் ஒத்துழைப்போடு வருகிற 24-ந் தேதி மேற்கொள்கிறது. அன்று ஒரு கோடி பனை விதை நடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பாரில் தொடங்கி பெரியதாழை வரை 163.5 கி.மீ. தூர கடற்கரையில் 15 லட்சம் பனைவிதைகள் நடவு செய்யப்பட உள்ளது.

இதையொட்டி திருச்செந்தூர் பகுதிகளில் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்-48 திட்ட அலுவலர் கவிதா தலைமையில் எல்-பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் பனை விதை சேகரிப்பு பணி நடைபெற்றது. இப்பணியில் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 100 பேர் ஈடுபட்டனர். முகாமில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டன. ஏற்பாடுகளை எல்-பாஸ் விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com