திருத்தணி முருகன் கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூல்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூலாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூல்
Published on

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம் 31-ந் தேதி ஆடிப்பூர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்திவிட்டு சென்றனர்.

பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணம் அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் எண்ணப்பட்டது.

இதில், உண்டியல் காணிக்கை ரூ.44 லட்சத்து 74 ஆயிரம் வசூலானது. மேலும், தங்கம் 85 கிராம், வெள்ளி 3 ஆயிரத்து 389 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com