கடலூர்-கொத்தட்டை சுங்கச்சாவடியில் வசூல் நிறுத்தம்

எருக்கன்காட்டுப் படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று பாலம் இணைப்புச்சாலை ஒரு பகுதி உள் வாங்கியுள்ளது.
கடலூர்-கொத்தட்டை சுங்கச்சாவடியில் வசூல் நிறுத்தம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள எருக்கன்காட்டுப் படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்று பாலம் இணைப்புச்சாலை ஒரு பகுதி உள் வாங்கியதை அடுத்து மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்று வருகின்றன.

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய தேசிய நெடுஞ்சாலைப் பாலம் (NH32) பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே, எருக்கன்காட்டுபடுகை பகுதியில் சுமார் 20 அடி நீளத்திற்கு இணைப்புச் சாலை உள்வாங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நாகை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வல்லம்படுகை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

உள்வாங்கிய இணைப்புச்சாலை சீரமைக்கப்படும் வரை கொத்தட்டை சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com