கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சரயு தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சரயு தகவல்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்டணம்

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 540 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயப்படுத்தலாம். விண்ணப்பதாரர்கள் வருகிற 30-ந் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம், நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும்.

மொபைல் செயலி

இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களுக்குரிய பயனர் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் வழங்கப்படும். மேலும் அருகில் உள்ள இ-சேவை மைங்களின் தகவல்களை முகவரி ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம். எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com