கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
Published on

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் கார்மேகம் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் அரசின் வரையறை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக கலெக்டர் கார்மேகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகளிர் உரிமைத்திட்டம் அதிகளவிலான மகளிருக்கு சென்றடையும் வகையிலான திட்டம் என்பதால் அதுகுறித்து அனைத்து அரசு அதிகாரிகள் உள்பட பலர் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அரசால் வரையறை செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு சென்றடையும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

பணிக்குழுக்கள் அமைத்தல்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகராட்சி பகுதியில் 188 ரேஷன் கடைகள், கிராம ஊராட்சிகளில் 1,093 ரேஷன் கடைகள், பேரூராட்சிகளில் 126 ரேஷன் கடைகள், நகராட்சிகளில் 134 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,541 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் முதல் 500 குடும்ப அட்டைகள் 437 ரேஷன் கடைகளிலும், 501 முதல் 1,000 குடும்ப அட்டைகள் 796 ரேஷன் கடைகளிலும், 1,001 முதல் 1,500 குடும்ப அட்டைகள் 284 ரேஷன் கடைகளிலும், 1,501 முதல் 2,000 குடும்ப அட்டைகள் 24 ரேஷன் கடைகளிலும் உள்ளன.

முகாமிற்கு முன்னேற்பாடு பணிகளாக பணிக்குழுக்கள் அமைத்தல், கட்டுப்பாட்டு அறை, பணியாளர்கள் நியமனம், பணியாளர்களுக்கான பயிற்சி, விழிப்புணர்வு நடவடிக்கைகள், முகாம்கள் ஏற்பாடு செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, துணை கமிஷனர் லாவண்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com