அய்யன்குளம் சுத்தப்படுத்தும் பணி

தஞ்சை மேலவீதியில் அய்யன்குளம் சுத்தப்படுத்தும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அய்யன்குளம் சுத்தப்படுத்தும் பணி
Published on

தஞ்சாவூர்;

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சி காலத்தின் போது மேலவீதியில் அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன் குளம் சீரமைக்கப்பட்டு குளத்தை சுற்றிலும் நடைபாதைகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. மேலும், குளத்தை சுற்றியுள்ள நடைபாதை பக்கவாட்டு சுவற்றில் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள், 9 நவரத்தினங்கள், 16 வகையான செல்வங்களைக் குறிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்படும் மாநகராட்சிகளில் குளங்கள் பாதுகாப்பு மற்றும் கலாசாரத்தை பேணி காத்தல் பிரிவில் தஞ்சை அய்யன்குளம் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து அய்யங்குளத்தில் உள்ள தண்ணீர் பாசி, குப்பைகள் படிந்திருந்ததை அகற்றி சுத்தப்படுத்தும் பணி மாநகராட்சி சார்பில் நேற்று நடைபெற்றது. மேலும் சுற்றுச்சுவர் வர்ணம் பூசும் பணி தொடங்கியது. இதனை கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகர் நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com