தீவன புற்கள் வளர்க்கும் பணியை கலெக்டர் ஆய்வு

விருத்தாசலம் அருகே தீவன புற்கள் வளர்க்கும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தீவன புற்கள் வளர்க்கும் பணியை கலெக்டர் ஆய்வு
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் எருமனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 10.83 ஏக்கர் பரப்பளவில் உள்ள மந்தவெளி மேய்க்கால் நிலங்களில் தீவன புற்கள், தீவன மரக்கன்றுகள் வளர்க்கும் பணி மற்றும் மழைநீரை சேகரித்து தீவன பயிர்களுக்கு பயன்படுத்தும் வகையில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைக்காலத்திற்கு முன்பு மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

நடவடிக்கை

மேலும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் இதுவரை பணி தொடங்காத பயனாளிகளை கண்டறிந்து விரைவில் பணிகளை தொடங்கி முடித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, ராதிகா, உதவி பொறியாளர்கள் கார்த்திக், சண்முகம், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் விஜயகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சவுமியா வீரமணி, ஊராட்சி செயலாளர் மதியழகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

விழிப்புணர்வு பேரணி

அதனை தொடர்ந்து காட்டுப்பரூர் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com