காந்தி படத்திற்கு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

திருப்பத்தூரில் காந்தி படத்திற்கு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காந்தி படத்திற்கு, கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
Published on

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி, காந்தியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, சப்-கலெக்டர் பானு, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com