ரேஷன் கடைகளில் கலெக்டர் விஷ்ணு திடீர் ஆய்வு

பாளையங்கோட்டையில் ரேஷன் கடைகளில் கலெக்டர் விஷ்ணு திடீர் ஆய்வு செய்தார்.
ரேஷன் கடைகளில் கலெக்டர் விஷ்ணு திடீர் ஆய்வு
Published on

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நேற்று காலையில் பாளையங்கோட்டை தாலுகா மகாராஜநகர் மற்றும் அன்புநகர் பகுதிகளில் உள்ள 2 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அனைத்து பொருட்களின் தரம், எடையளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது நெல்லை மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com