திருச்செங்கோடு அருகே பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

திருச்செங்கோடு அருகே பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
திருச்செங்கோடு அருகே பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் கலெக்டரிடம் மனு
Published on

திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் அருகே உள்ள சாலப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சாலப்பாளையம் பகுதியில் பின்தங்கிய மக்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் இல்லாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறோம். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே எங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு வடபுறம் அரசு புறம்பேக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் பொது கழிப்பிடம் கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com