

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
* பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஆர்.ஜெயா, சிறப்பு முயற்சிகள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* காஞ்சிபுரம் கலெக்டராக இருந்த கலைச்செல்வி மோகன், பொருளியல் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* செங்கல்பட்டு கலெக்டராக இருந்த சினேகா, காஞ்சிபுரம் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
* செங்கல்பட்டு சார் ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், செங்கல்பட்டு கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திருவள்ளூர் சார் ஆட்சியர் கு.ரவிகுமார், கரூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* மத்திய அரசுப் பணியிலிருந்து திரும்பிய சந்திர சேகர் சாகமூரி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) முதன்மைச் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயலாளராக அ.சண்முக சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஈரோடு வணிகவரித்துறை இணை ஆணையராக நே.பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.