பேராசிரியர்களை கல்லூரிக்கு வரச்சொல்லி நிர்ப்பந்திக்க கூடாது கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

பேராசிரியர்களை கல்லூரிக்கு வரச்சொல்லி நிர்ப்பந்திக்க கூடாது கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு.
பேராசிரியர்களை கல்லூரிக்கு வரச்சொல்லி நிர்ப்பந்திக்க கூடாது கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு
Published on

சென்னை,

கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சில கல்லூரிகளில் இணைய வழியாக வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களை கல்லூரிக்கு கண்டிப்பாக வரக் கூறுவதாகவும், தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்.ஏ.ஏ.சி.) சார்ந்த பணிகள் மற்றும் இதர கல்லூரி சார்ந்த பணிகளை கல்லூரிக்கு வந்து மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

இது கொரோனா தொடர்பான அரசாணையில் தெரிவித்துள்ள வழிமுறைகளை மீறுவதாகும். எனவே கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில், கல்லூரி ஆசிரியர்களை எக்காரணத்தைக் கொண்டு கல்லூரிக்கு நேரில் வர நிர்ப்பந்தம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com