நர்சிங் கல்லூரி மாணவர் சாவு

சுற்றுச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது: நர்சிங் கல்லூரி மாணவர் சாவு
நர்சிங் கல்லூரி மாணவர் சாவு
Published on

அருமனை, 

குமரி மாவட்டம் எல்லைப் பகுதியான வெள்ளறடையில் உள்ள கூதாளி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். இவருடைய ஒரே மகன் சாந்தோ எஸ் கரன் (வயது 20). இவர் திருவட்டார் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று களியல் அருகே அரகநாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையோரம் இருந்த சுற்றுச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சாந்தோ எஸ் கரனை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் சாந்தோ எஸ் கரன் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து கடையாலுமூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com