கல்லூரி மாணவர் தற்கொலை

செங்குன்றத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கல்லூரி மாணவர் தற்கொலை
Published on

செங்குன்றம், 

செங்குன்றம் காந்தி நகர் அறிஞர் அண்ணா முதல் தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் அருள் ஆனந்த்(வயது 21). இவர், சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி விஸ்காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அருள் ஆனந்த், வீட்டின் அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருள் ஆனந்த் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com