

சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சியில் இருந்து ப்ராஜெக்ட் பணிக்காக கடந்த பிப். 14ஆம் தேதி மாணவி சென்னைகு வந்துள்ளார். மாணவி சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் அப்பிற்கு யாரோ அனுப்பியுள்ளனர்.கடந்த 9ஆம் தேதி வெளியே செல்ல காத்திருந்த மாணவியை அடையாளம் தெரியாத 4 பேர் கும்பல் காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.
முகத்தில் மயக்கப் பொடி பூசியதாகவும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வேறு இடத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். உடல் நிலையில் மாற்றத்தை உணர்ந்ததால், 10ஆம் தேதி மாலை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது மீண்டும் 3 பேர் கொண்ட கும்பல் காரில் ஏற்றிச் சென்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மனைவி அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மாணவி அளித்த புகாரின் உண்மைத்தன்மை குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.