கல்லூரி மாணவி தற்கொலை

பாவூர்சத்திரம் அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி தற்கொலை
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர், ஆவுடைசிவன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சண்முகசெல்வன். இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 21). இவர் குற்றாலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி ராஜேஸ்வரி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com