கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
Published on

சங்ககிரி:

சங்ககிரி அருகே உள்ள பன்னக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45), லாரி மெக்கானிக். இவருக்கு சஞ்சய் என்ற மகனும், சவுமியா, தானு (19) என்ற இரு மகள்கள் இருந்தனர். சவுமியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் தானு எடப்பாடி அரசு கலை கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் தானுவுக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் படிப்பை நிறுத்தி விட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற தானு, அந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று, தானுவின் உடலை மீட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com