கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கம்பத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கம்பம் மணிநகரை சேர்ந்தவர் மணிமந்திரி. இவர், அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவருடைய மகன் பாலாஜி (வயது 19). இவர், திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் உடல்நிலை சரியில்லாததால் பாலாஜி, கல்லூரியில் விடுமுறை எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்திருந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக பாலாஜி வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com