பைக் வாங்கி தராததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தற்கொலை

விழுப்புரம் அருகே பைக் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா மொன்னையன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலைமணி மகன் தேவகுமரன் (18 வயது). இவர், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது தந்தையிடம் கல்லூரிக்கு சென்று வர வசதியாக புதியதாக பைக் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மாணவர் தேவகுமரன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மாணவர் தேவகுமரன், தனது வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் தேவகுமரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com