காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
Published on

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு காமராஜர் தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி (வயது 17), திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் பிரசாந்த் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரி, காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதற்கு பிரசாந்த் மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி எலி மருந்து (விஷம்) சாப்பிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com