செல்போன் பயன்படுத்தியதை கண்டித்த பெற்றோர் - கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு

செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருச்சி,

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹரிதாஸ் (18 வயது). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேலாண்மை முதலாமாண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த ஹரிதாஸ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பாலக்கரை போலீசார் அங்கு சென்று ஹரிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com