வீட்டு வேலை செய்யாததை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

வீட்டு வேலை செய்யாததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகேயுள்ள சென்னயம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கார்த்திபிரியா (20 வயது). இவர் கோவில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும் இவர், வீட்டு வேலைகளை செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர் வீட்டு வேலை செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்த கார்த்திபிரியா வீட்டில் பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டிற்கு சென்ற பெற்றோர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com