விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை

ராசிபுரம் அருகே தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
Published on

ராசிபுரம்

தேர்வில் தோல்வி

ராசிபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். கூலித் தொழிலாளி. இவரது மகள் சுஜிதா (வயது 21). இவர் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அவர் செமஸ்டர் தேர்வு எழுதி இருந்தார்.

இந்தநிலையில் அந்த தேர்வு முடிவு வெளியானது. அதில் 2 பாடங்களில் சுஜிதா தோல்வி அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார்.

பரிதாப சாவு

பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காப்பாற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஜிதா பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com