கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Published on

ஆம்பூரை அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி பெரிய வெங்கட்சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த மாணவர் ஆகாஷ் திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு கொண்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாணவரை மீட்டனர். அதற்குள் அவர் இறந்துவிட்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் போலீசார் ஆகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com