கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

விக்கிரமசிங்கபுரம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஞான கபிரியேல். இவருடைய மகள் அகல்யா (வயது 18). இவர் பாபநாசத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனைகண்ட அவரது தந்தை, அம்மாவுக்கு சமையல் செய்ய உதவி செய்ய வேண்டியது தானே, செல்போன் பார்த்துக் கொண்டிருக்கிறாயே என்று கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அகல்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com