கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சுரண்டை அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சுரண்டை:

சுரண்டை அருகே வீராணம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் மகன் மைதீன்கான் (வயது 21). இவர் சுரண்டை அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு சென்று மதியம் வீடு திரும்பும் மைதீன்கான், நண்பர்களுடன் விளையாட சென்று விடுவதாகவும், தினமும் தாமதமாக வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது பெற்றோர் கண்டித்ததால் சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் மைதீன்கான் வீராணத்தில் உள்ள தனது நண்பரின் அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வீரகேரளம்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் மைதீன்கான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com